இவர் வகுப்பறையில் முதல் வருசையில் அமர்ந்து, ஆர்வமாக நடத்தபடும் பாடங்களை குறிப்பு எடுக்கிறார், கேட்கபடும் கேள்விகளுக்கு முதல் ஆளாக ஆர்வமாக பதில் அளிக்கிறார். வரும் மே மாதம் தனது பட்ட படிப்பை முடிக்க இருக்கும் இவர்தான் உலகிலேயே அதிக வயதில் பட்டம் பெற்றவர் என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறபோகிறார்.
இது சம்பத்தமாக அவர் கூறுகையில், உலக சாதனைக்காக நான் பட்ட படிப்பை படிக்க வில்லை, இன்று பணம் சம்பாதிப்பதர்காக மட்டும் கல்வி கற்கும் நிலை எங்கும் உள்ளது, ஆனால் ஏதாவது புதிதாக கற்க வேண்டும் என்ற எனது விருப்பதிற்காக நான் இங்கு சேர்ந்துள்ளேன் , இது எனக்கு மன நிம்மதியையும், திருப்தியையும் தருகிறது, என்று கூரும் இவருக்கு தற்போது 3 மகன் ( நான்காவது மகன் 1995 ல் இறந்துவிட்டாராம்) 13 பேரபிள்ளைகளும் உள்ளனர்.
இவர் கணவர் 1972 ல் இறந்து விட தனது கோதுமை விளைநிலங்களையும், பண்ணையயையும் பராமரித்து வருகிறார்.
(வகுப்பறை வாசலில் காத்திக்கும் போது)
(ஆசிரியையுடன் உறையாடல்)
பல்கலைகழக வரலாற்று துறை தாளாளர் டோட் லியாஹி கூருகையில் "ஆரம்பத்தில் ஓச்சிடம் மற்ற மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்ற கவலை எங்களுக்கு இருந்தது, ஆனால் அடுத்த வாரத்திலேயே அந்த கவலை மறைந்தது, சகமாணவர்கள் சகஜமாக ஓச்சிடம் பழக தொடங்க்கியது மகிழ்ச்சியை தந்தது.ஓச் வரலாற்றில் இடம்பெறப் போகும் ஒரு சாதனையாளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை."
ஓச் தனது வீட்டில் கணினி முன் அமர்ந்து வரலாற்று ஆய்வுகள் செய்வதும், எழுதுவதுமாக சுருசுருப்பாக இருப்பாறாம், அதர்க்கு உதவியாக புத்தகங்கள் அனைத்தும் எடுக்க சுலபமாக அவரை சுற்றி அடுக்கி வைத்துள்ளாராம்.
(தன் பேத்தி அலெக்சான்ராவுடன்)
அலெக்சான்ரா ஓச் இவர் ஓச்சின் 21 வயது பேத்தி, இவர் ஓச்சை சில நேரங்கள் கல்லூரிக்கு அழைத்து சென்று வருகிறார். அவர் கூறுகையில் "எத்தனை பேர் என்னை போன்று தன் பாட்டியை கல்லூரிக்கு அழைத்து செல்லும் சந்தர்பத்தை பெற்றிருக்கிறார்கள்? என்று பெருமையுடன் கூறுகிறார். 
(பல்கலைகழகம் நேக்கி காரில் பயணம்)
பட்டதாரியான பின் என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு , வேலை தேட போகிறேன் ஒரு storyteller (வரலாற்று நிகழ்வுகளை ஓவியம் ,எழுத்து, சிற்பங்கள் மூலம் விளக்கும் ஒரு கலை) பனி செய்ய விருப்புவதாக மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னாறாம்.
கல்வியின் மீது கொன்ட ஆற்வத்தால் , அதற்காக இந்த வயதிலும் ஓச் மேற்கொண்ட முயற்ச்சியையும் நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது.
வாழ்த்துக்கள் ஓச்












































