நான் நீண்ட நாள் உயிருடன் இருக்கபோவதில்லை என்றே எனது தந்தை நினைத்தார் . ஆனால் எனக்கு இரண்டு கையும், காலும் இல்லையே தவிர மற்றபடி எனது உடலில் எந்த குறையும் இல்லை என்றே மருத்துவ பறிசோதனையில் தெரியவந்தது இந்த குறைபாடுடன் நான் எப்படி இந்த உலகில் வாழ முடியும் என்ற கவலையும், பயமுன் எனது பெற்றோற்க்கு மிக அதிகமாக இருந்தது. நான் பள்ளிக்கு செல்லும் வயதை அடைந்தேன். ஆஸ்திரெலியா உள்ள பிரபளமான மேய்ன் ஸ்ரீம் (main-Stream school) பள்ளியில் ஒரு விதிமுறை அங்கு உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது. எனது பெற்றோரின் முயற்ச்சியாலும் , கடவுளின் கருனையாலும் அந்த சட்டத்தை உடைத்து முதல் முறையாக ஒரு ஊனமுற்றவன் அந்த பள்ளியில் மாணவனாக சேர்ந்தேன். எல்லோரும் போலவே பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற எனது ஆசைக்கு எனது உடல் குறைபாடு அனுமதிக்கவில்லை.
தன்நம்பிக்கைக்கு இவரை விட ஒரு உதாரணம் உண்டா?
Saturday, May 12, 2007
|
email this
|
digg it
11 comments
Posted by சாதிக்
Published in
தன் நம்பிக்கை
இவர் பெயர் நிக் வுஜிஸிக்(Nic vujicic) மற்றவர்கள் போல அல்ல பிறவியிலேயே இரண்டு கையும், காலும் இல்லாதவர்.அவர் தன் வாழ்க்கையில் சந்தித்த சிலவற்றை கூறுகையில்..
என் பெற்றோர்கள் கிருஸ்தவர்கள், எனது தந்தை கிருஸ்தவமதத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர். அன்று டிசம்பர் 4ம் தேதி 1982 மெல்போனில்(ஆஸ்த்ரேலியா )உள்ள ஒரு மருத்துவமனையில் எனது தந்தை கடவுளை பிராத்தனை செய்தபடி தங்களுக்கு பிறக்க இருக்கும் முதல் குழந்தையை காண ஆவலாக காத்திருந்தார்.
எனது பெற்றோர்க்கு முதல் மகனான நான் பிறந்தேன் இரண்டு கையும், காலும் இல்லாத ஒரு அதிசய பிறவியாக. அவர்களால் இந்த அதிச்சியை ஜீரனிக்க முடியவில்லை. (இவருக்கு பின் பிறந்த ஒரு சகோதரனனும், சகோதரியும் உள்ளனர் அவர்கள் மற்றவர்கள் போல ஆரோக்கியமாகவே பிறந்துள்ளனர் ) மருத்துவர்களும் இன்றுவரை எனது இந்த குறைபாட்டிற்கான காரணத்தை கண்டரியமுடியவில்லை.
மற்றவர்கள் எனது இந்த அதிசய பிறப்பை பற்றி எனது தந்தையிடம் கேட்டனர் " கடவுள் அன்புடையவர் என்றால் பிறகு ஏன் குறைபாடுள்ள குழந்தையை உங்களை போன்ற அதிக ஈடுபாடும் , பக்தியும் உள்ளவர்களுக்கு கொடுக்கவேண்டும்?'' இது எனது பெற்றோர்க்கு மேலும் மனவேதனையை கொடுத்தது.
பள்ளியில் என்னை ஒரு அதிசய பிறவியாக மற்றவர்கள் பார்த்தனர். சில நேரம் வெருப்பாகவும்,கோபமாகவும் இருந்தது , என்ன செய்ய அவர்கள் மீது எந்த தவறும் இல்லையே.எனது நிலமை எனக்கு நன்றாகவே தெரியும்.எனது உடல்தான் வித்தியாசமானதே தவிர எனது மனது எல்லோறும் போல ஆசை,பாசம்,அன்பு,விருப்பம், கோபம் நிறைந்த ஒரு சராசரி மனிதனே.
சில நேரங்கள் நான் பள்ளிக்கு செல்வதே இல்லை, அந்த நேரங்களில் எனது பெற்றோர்கள் எனக்கு ஆறுதல் தந்து ஊக்கபடுத்தினர். விரைவில் நான் பள்ளியில் புதிய நண்பர்களுடன் நட்பை ஏற்படுத்தினேன். இப்போது என்னை அவர்களைபோன்ற சாதாரன மனிதனாக நினைக்கதொடங்கினர்.
ஆனால் சில நேரம் கோபமும், இயலாமையும் என்னை வாட்டியது. நான் மட்டும் ஏன் இப்படி? நான் என்ன தவறு செய்தேன், கடவுள் என்னைமட்டும் ஏன் இப்படி படைக்கவேண்டும்?
இந்த எண்ணங்களை காலபோக்கில் உதறிதள்ளீனேன்,அதற்க்கு எனது பெற்றோர்கள் கொடுக்கத ஊக்கமே காரணம், மீண்டும் அவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
நான் இன்று 21 வயது நிரம்மிய இளைஞன், வணிகவியளில் பட்டம் பெற்றுள்ளேன்.எனது 25 வது வயதில் எனது சொந்த சம்பாத்தியதில் எனது வாழ்க்கையை தொடங்கவேண்டும் என ஆசைபடுகிறேன். ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய உள்ளேன், எனது உடல் குறைக்கு ஏற்றவாரு நான் தனியாக இயக்ககூடிய கார் ஒன்றை எனது சொந்த செலவில் தயாரிக்கவேண்டும் என்ற எண்ணமும் உள்ளது .
பேச்சாளராக பல இடங்களில் உறையாற்றியுள்ளேன். இன்றைய இளைஞர்கள் சத்திக்கும் பிரச்சனைகள் பற்றிய எனது உறை பெரும்பாளானவர்களால் புகழப்பட்டது.
எனக்கு பல கனவுகளும், லட்சியமும் உள்ளது, அவற்றை என் வாழ்நாளுக்குள் அடையவேண்டும் என கடவுளை பிராத்தனை செய்துவருகிறேன். விருப்பங்களும், இலக்குகளும் நல்லதாக இருந்தால் அது நிச்சயமாக சரியான நேரத்தில் கடவுளாள் நிறைவேற்றிதரபடும் என்று நான் நம்புகிறேன். எனது வாழ்க்கை குறித்து புத்தகம் ஒன்றை எழுதிவருகிறேன் விரைவில் வெளியிடவுள்ளேன்,
எனது வாழ்வை சுருக்கமாக சொல்வதானால்..
----கைகள் இல்லை , கால்கள் இல்லை....கவலையும் இல்லை---
More info: http://www.lifewithoutlimbs.org/
உலகிலேயே மிக பெரிய பள்ளம் இதுதானாம்.
Thursday, May 3, 2007
|
email this
|
digg it
2 comments
Posted by சாதிக்
Published in
அதிசயம்
ரஷ்யாவில் கிழக்கு சிபேரியாவிற்க்கு (Siberia) அருகில் உள்ள நகரம் மிர்னா(Mirna) இங்குதான் உலகிலேயே மிக பெரிய பள்ளம் உள்ளது, ஆழம் சுமார் 525 மீட்டர்.
இந்த ராட்சத டிரக் நீளம் 13.36 மீட்டர் அகலம் 7.78 மீட்டர் உயரம் 6.65 மீட்டர்
இந்த ராட்சத ட்ரக் அடுத்த படத்தில் எப்படி ஒரு சிறிய புள்ளியாக தோன்றுவதை நீங்களே பாருங்கள்..
கல்லூரிக்கு சென்று படிக்கும் 95 வயது மூதாட்டி.
Sunday, April 29, 2007
|
email this
|
digg it
7 comments
Posted by சாதிக்
Published in
தன் நம்பிக்கை
ஆம்..இந்த 95 வயது மூதாட்டி இந்த வயதிலும் கல்லூரிக்கு சென்று பட்ட படிப்பு படித்து வருகிரார் என்பது சிலருக்கு ஆச்சர்யத்தை தரலாம். இவர் பெயர் நோலா ஓச் (Nola Ochs) அமெரிக்காவில் ஹாய்ஸ் (HAYS) என்ற பகுதியில் அமைந்துள்ள போர்ட் ஹய்ஸ் மாநில பல்கலைகழகத்தில் (Fort Hays State University) வரலாறு சம்பத்தமான பாடத்தில் பட்ட படிப்பு படித்து வருகிறார்.
இவர் வகுப்பறையில் முதல் வருசையில் அமர்ந்து, ஆர்வமாக நடத்தபடும் பாடங்களை குறிப்பு எடுக்கிறார், கேட்கபடும் கேள்விகளுக்கு முதல் ஆளாக ஆர்வமாக பதில் அளிக்கிறார். வரும் மே மாதம் தனது பட்ட படிப்பை முடிக்க இருக்கும் இவர்தான் உலகிலேயே அதிக வயதில் பட்டம் பெற்றவர் என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறபோகிறார்.
இது சம்பத்தமாக அவர் கூறுகையில், உலக சாதனைக்காக நான் பட்ட படிப்பை படிக்க வில்லை, இன்று பணம் சம்பாதிப்பதர்காக மட்டும் கல்வி கற்கும் நிலை எங்கும் உள்ளது, ஆனால் ஏதாவது புதிதாக கற்க வேண்டும் என்ற எனது விருப்பதிற்காக நான் இங்கு சேர்ந்துள்ளேன் , இது எனக்கு மன நிம்மதியையும், திருப்தியையும் தருகிறது, என்று கூரும் இவருக்கு தற்போது 3 மகன் ( நான்காவது மகன் 1995 ல் இறந்துவிட்டாராம்) 13 பேரபிள்ளைகளும் உள்ளனர்.
இவர் கணவர் 1972 ல் இறந்து விட தனது கோதுமை விளைநிலங்களையும், பண்ணையயையும் பராமரித்து வருகிறார்.
(வகுப்பறை வாசலில் காத்திக்கும் போது)
(ஆசிரியையுடன் உறையாடல்)
பல்கலைகழக வரலாற்று துறை தாளாளர் டோட் லியாஹி கூருகையில் "ஆரம்பத்தில் ஓச்சிடம் மற்ற மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்ற கவலை எங்களுக்கு இருந்தது, ஆனால் அடுத்த வாரத்திலேயே அந்த கவலை மறைந்தது, சகமாணவர்கள் சகஜமாக ஓச்சிடம் பழக தொடங்க்கியது மகிழ்ச்சியை தந்தது.ஓச் வரலாற்றில் இடம்பெறப் போகும் ஒரு சாதனையாளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை."
ஓச் தனது வீட்டில் கணினி முன் அமர்ந்து வரலாற்று ஆய்வுகள் செய்வதும், எழுதுவதுமாக சுருசுருப்பாக இருப்பாறாம், அதர்க்கு உதவியாக புத்தகங்கள் அனைத்தும் எடுக்க சுலபமாக அவரை சுற்றி அடுக்கி வைத்துள்ளாராம்.
(தன் பேத்தி அலெக்சான்ராவுடன்)
அலெக்சான்ரா ஓச் இவர் ஓச்சின் 21 வயது பேத்தி, இவர் ஓச்சை சில நேரங்கள் கல்லூரிக்கு அழைத்து சென்று வருகிறார். அவர் கூறுகையில் "எத்தனை பேர் என்னை போன்று தன் பாட்டியை கல்லூரிக்கு அழைத்து செல்லும் சந்தர்பத்தை பெற்றிருக்கிறார்கள்? என்று பெருமையுடன் கூறுகிறார்.


சக மாணவர்களை பற்றி கேட்கப்பட்டபோது. அனைவரும் தன்னை தங்கள் சக மாணவராக, தோழனாக ஏற்றுகொண்டதாகவும், மதிப்பதாகவும், மகிழ்ச்சியாக பதிலலிக்கிறார் . முதலில் நான் ஒரு மாணவன் பிறகுதான் மனைவி, தாய் என்ற எண்ணம் என்னுல் இருக்கிறது என்று கூரும் இந்த 95 வயது மூதாட்டியை பார்க்கும் போது ஆச்சர்யப் படாமல் இருக்க முடியவில்லை
வயது தனக்கு ஒரு தடையள்ள மனதும், உடலும் இன்னும் இளமையாக இருப்பதாக கூருகிறார்.




(பல்கலைகழகம் நேக்கி காரில் பயணம்)
பட்டதாரியான பின் என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு , வேலை தேட போகிறேன் ஒரு storyteller (வரலாற்று நிகழ்வுகளை ஓவியம் ,எழுத்து, சிற்பங்கள் மூலம் விளக்கும் ஒரு கலை) பனி செய்ய விருப்புவதாக மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னாறாம்.
கல்வியின் மீது கொன்ட ஆற்வத்தால் , அதற்காக இந்த வயதிலும் ஓச் மேற்கொண்ட முயற்ச்சியையும் நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது.
வாழ்த்துக்கள் ஓச்
பயமோ..பயம்
Friday, April 20, 2007
|
email this
|
digg it
1 comment
Posted by சாதிக்
Published in
புகை படம்
இந்த மாதிரி பியூட்டு பார்லர் நம்ம ஊருல இருக்கா?
|
email this
|
digg it
5 comments
Posted by சாதிக்
Published in
சுவாரசியம்